ஈராக்கில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் குண்டுமழை

france ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே வலியுறுத்தினார். கடந்த திங்கட்கிழமை, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

 

மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் 3 நாட்களுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பிரான்ஸ் நேற்று வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் இந்த தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ரஷ்யாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

 

முன்னதாக, பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது பிரான்ஸ். ஏற்கனவே, ஈராக்கில் ஐ.எஸ். தீவரவாதிகள் மீது வான்வழித் தாக்குதலை பிரிட்டன் நடத்தி வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply