பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதை ஒரு குடிமகனாக என்னால் மறுக்க முடியாது: அமீர்கான் குரல்
நாட்டில் சகிப்புத் தன்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்தனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பலரும் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளார். கடந்த 8 மாதங்களில் நாட்டில் பாதுகாப்பின்மையும், அச்சுறுத்தலும் நிலவுவதாக தான் உணர்வதாகவும், தன்னுடைய மனைவி முதல்முறையாக இந்த நாட்டைவிட்டே சென்றுவிடலாம் என்று கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் அமீர்கான் பேசியதாவது:-
”எல்லா சமூகத்தினருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான விஷயம். பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வலிமையான நிலைப்பாடும், வலிமையான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.
ஒரு குடிமகனாக என்னால் மறுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பங்கள் என்னை எச்சரிக்கை படுத்தியிருக்கிறது என்பதை ஒருகுடிமகனாக என்னால் மறுக்க முடியாது.
என் மனைவி கிரண் முதல் முறையாக ’நாம் வெளிநாட்டிற்கு சென்றுவிடலாமா?’ என்று கேட்டுள்ளார்.
அவர் தன்னுடைய குழந்தைக்காகவும், நம்மைச் சுற்றி என்ன மாதிரியான சூழ்நிலை உருவாகும் என்றும் பயப்படுகிறார்.
என்னுடைய மனைவி தினமும் செய்திதாளை படிக்கவே பயப்படுகிறார். நாட்டில் அமைதியின்மையும், விரக்தியும் அதிகரித்து வருகிறது.
படைப்பாளிகள் தாங்கள் எந்த விவகாரம் முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்களோ, அதற்காக அவர்களது அதிருப்தியை விருதினை திருப்பி அளிப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். தங்கள் விருப்பப்படி வன்முறை சம்பங்களுக்கு எதிராக போராட்டங்களை கையிலெடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
இந்த விவகாரத்தில் என்னை மதத்துடன் தொடர்பு படுத்த வேண்டாம். ஒரு இந்தியனாக பிரதிபலிக்கிறேன். இஸ்லாமியராக அல்ல என கூறினார்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply