துனிசியாவில் ஜனாதிபதி பாதுகாப்பு வீரர்களின் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்: 11 பேர் பலி
துனிசியாவில் ஜனாதிபதி பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். துனிசியா தலைநகர் துனிஷில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் துனிசியாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மீட்பு பணிகள் பாதிப்படைந்துள்ளது.
முன்னதாக பாரீஸ் மற்றும் பெய்ரூட் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு துனிசியாவில் பாதுகாப்பு தீவிரவப்படுத்தப்பட்டது. தலைநகர் துனிசில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்த பேருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. துனிசியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இரண்டு பெரிய தாக்குதல்களில் 38 வெளிநாட்டவர்கள் மற்றும் 28 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply