பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் அரசியல் தஞ்சம்?
முல்லைத்தீவில் புலிகள் ஒரு மிகச் சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்ட நிலையில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஸ்கென்டிநேவின் நாடொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோர் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் இலங்கை விமானப்படையின் யு.ஏ.பி. உளவு விமானத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடக புலிகள் 10வது தடவையாக விடுத்திருந்த போர் நிறுத்த யோசனை தாம் நிராகரித்துள்ளதாகவும் 20 சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதை தவிர புலிகளுக்கு வேறு மாற்று வழிகள் இல்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply