பெர்லின் நகர வீடிழந்தோருக்கு உணவு சமைத்துக் கொடுத்து நன்றிக்கடன் செலுத்தும் சிரிய நாட்டு அகதி
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் குடும்பத்தாருடன் வசித்துவந்த அலெக்ஸ் அஸாலி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து குடும்பத்தார், நண்பர்கள் என அனைவரையும் விட்டு, ஒரு பொருளும் இல்லாது, லெபனான், சைப்ரஸ், எகிப்து, சூடான் மற்றும் லிபியா நாடுகள் அனைத்தையும் கடந்து, ஐரோப்பாவை சென்றடைந்தார்.ஜெர்மனியின், பெர்லின் நகரில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட அலெக்ஸ், தன்னை அனுமதித்ததற்காக நன்றி செலுத்தும் விதமாக இந்நகரின் வீடிழந்த நபர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் உணவு சமைத்து பரிமாறுகின்றார்.
சில சமயங்களில் மற்றவரது உதவியுடன் இந்த சமையலை செய்யும் அலெக்ஸ், சிரிய நாட்டு உணவு வகைகளை சமைத்து பரிமாறி வருகின்றார்.
அலெக்ஸ் பற்றி தெரிந்துகொண்ட ஒரு பெண், அவர் உணவு சமைக்கும் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படம் பரவியதையடுத்து, உலகம் முழுவதிலும் உள்ள பலராலும் அலெக்ஸ் பாராட்டப்பட்டு வருகின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply