இலங்கைக்கு ஆதரவாக ஆறு நாடுகள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பு
இலங்கை விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கும் பிரேரணைக்கு ஜப்பான், துருக்கி, உகண்டா உட்பட ஆறு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் நிலைப்பாடு இதுதான என இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியெழுப்பிய போதும், “இல்லை. அவ்வாறு கூறமுடியாது. பாதுகாப்புச் சபையில் ஜப்பானுக்கு விளக்கம் தேவையில்லை. இந்த விடயத்தில் பொது இணக்கப்பாடு ஒன்று ஏற்படும் எனக் கருதுகிறோம் ” என ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜப்பான் தூதுவர் டகாசு கூறியுள்ளார்.
அதேநேரம், விடுதலைப் புலிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்தே அவுஸ்ரியா தனது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. இலங்கை தொடர்பான விடயம் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படுவதற்கு அவுஸ்ரியா ஆதாவு வழங்கும் என முன்னர் வெளியான தகவல் பிழையாக வெளியிடப்பட்டிருப்பதாகவும், புலிகளின் நடவடிக்கைக்கு அமையவே தமது தீர்மானம் அமையும் என அவுஸ்ரியா பேச்சாளர் கூறியுள்ளார்.
“இலங்கையின் மனித உரிமை நிலைமைகளைக் கவனத்தில் கொண்டே பாதுகாப்புச் சபையில் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயம் இடம்பெறவேண்டுமா என்பதை நாம் தீர்மானிப்போம்” என அவர் இன்னர் சிட்டி பிரசுக்குக் கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை தொடர்பான பிரேரணையொன்று பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப் போவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன் ரைஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply