துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல்

puttinதங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியதற்கு எதிராக, அந்நாட்டின் மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாட்டு போர் விமானம் ஒன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி,  எங்கள் நாட்டு எல்லைக்குள் எந்த நாட்டு விமானம் அத்துமீறி நுழைந்தாலும், சுட்டு வீழ்த்துவோம் என அதிரடியாக அறிவித்தது. இதனால் கடும் ஆவேசமடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி ராணுவத்தினர் சர்வதேச சட்டத்தை மீறி, விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

 

சில தினங்களுக்கு முன்னர் துருக்கி நாட்டுக்கு எதிராக, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், பல பொருளாதார தடைகளை அதிரடியாக அறிவித்த நிலையில், தற்போது, துருக்கி மீதான பொருளாதாரத் தடைக்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளதாகவும், ரஷ்ய நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி இந்த தடை விதிக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply