ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்: பாகிஸ்தானில் உச்சகட்ட பாதுகாப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் தனிநாடு அமைத்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளனர்.isis சர்வதேச நாடுகளில் இந்த அமைப்பின் தீவிரவாதிகள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. பஞ்சாபில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்கள் மற்றும் ராணுவம் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் மாகாண உள்துறை செய்துள்ளது. வழக்கத்தை விட ராணுவமும், போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இது வழக்கமான நடவடிக்கைதான். ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல் இல்லை என பஞ்சாப் சட்ட மந்திரி ரானா சனானுல்லா மறுத்துள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் ஐ.எஸ்.தீவிரவாதிகளோ, அவர்களின் அமைப்போ இல்லை என நவாஸ் செரீப் அரசு தெரிவித்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply