முகாமில் பாதுகாப்பில்லை! கண்ணீர் விடும் ஈழ அகதிகள்

எங்கள் முகாமுக்கு வந்து ரவுடிகள் தாக்குகின்றனர் என மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் புகார் makkalதெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த கலவரத்தால் தப்பி, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் முகாம்கள் அமைத்து கொடுத்தது அரசு. தொப்புள் கொடி உறவென்றும், கடல் பிரித்தாலும் மொழியால் இணைந்தவர்கள் என்றும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள், கிட்டத்தட்ட சிறையில் வாழ்வது போலவே வாழ்கிறார்கள் என தமிழக ஊடகமான விகடன் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க, மதுரை ஆனையூர் முகாமை சேர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீருடன் வந்தனர் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் தெரிவித்துள்ளதாவது,

“எங்க தலைவிதியால இப்படியொரு நிலையை கடவுள் எங்களுக்கு கொடுத்துட்டான். எங்களுடைய உறவென்றுதான் இங்குள்ள மக்களை நினைக்கிறோம். கடந்த சில மாதமாக எங்கள் முகாமுக்குள் சில ரவுடிகள் புகுந்து எல்லோரையும் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள்.

பொலிசில் புகார் கொடுத்தால் அவர்களும் ரவுடிகளுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. கடந்த வாரம் எங்க பசங்க ஐந்து பேரை கத்தி, அரிவாளால் கடுமையாக தாக்கி காயப்படுத்தி விட்டார்கள். இப்போது அவர்கள் வைத்தியசாலையில் இருக்கிறார்கள். இதுவரை பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்” என்றார்கள்.

கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மனுவுக்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply