அமெரிக்காவில் புகை பிடிப்பதை தடுத்த பார் பணிப்பெண்ணை சுட்டுக் கொன்ற குடிமகன்
பொது இடத்தில் புகை பிடிக்க கூடாது என சுட்டிக்காட்டியதற்காக அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் உள்ள ஒரு மது அருந்தும் பாரில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த ஒரு பணிப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாருக்கு வந்த ஜானி மேக்ஸ் மவுண்ட்(45) என்ற வாடிக்கையாளர் சிகரெட் பற்றவைக்க முயன்றபோது ஜூலியா பிரைட்வெல்(52) என்ற பணிப்பெண் அதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.
சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த ஜூலியா, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பலியான ஜூலியா அந்த மதுபாரில் சுமார் எட்டாண்டுகளாக பணியாற்றி வந்ததாகவும், தனது கனிவான உபசரிப்பு மற்றும் பணிவான பேச்சால் பல வாடிக்கையாளர்களின் அன்புக்கு பாத்திரமாக இருந்ததாகவும் இதரப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply