ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாகவும், ஆகவே தமிழக அரசு அவர்களை விடுவிக்க முடியாது எனவும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவு விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதில் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை, ஏற்கனவே விசாரித்த மூன்று நீதிபதிகளின் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply