சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியது இங்கிலாந்து

air londonசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது இங்கிலாந்து தனது விமான தாக்குதலை தொடங்கி உள்ளது.அமெரிக்க கூட்டுப் படைக்கு உதவியாக ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. 10 நேர விவாதத்திற்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில், தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாக 397 எம்.பி.க்களும், எதிராக 223 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

தாக்குதல் நடத்த பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்ததையடுத்து அக்ரோதி, சைப்ரஸ் பகுதியில் இருந்து 4 போர் விமானங்கள் புறப்பட்டு சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் குண்டுகளை வீசின. குறிப்பாக எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒமர் எண்ணெய் வயல்களை குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை மந்திரி மிக்கேல் பாலோன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply