புலிகளைப் பாதுகாக்கவே யுத்த நிறுத்தம் கோரும் சர்வதேசம்: அமைச்சர் டளஸ் குற்றச்சாட்டு

வடக்கில் 20 கிலோ மீட்டர் சதுரப் பரப்புக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரும் அவரது சகாக்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில சர்வதேச நாடுகள் யுத்த நிறுத்தமொன்றுக்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதானது புலிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகுமென போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபைத் தேர்தல பிரசாரம்; தொடர்பான நடவடிக்கைகளை விளக்குவது குறித்த ஊடகவியலாளர் மகாநாடு இன்று கொழும்பு மகாவலி கேந்திரத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் டளஸ் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி முதல் தேர்தல் தொகுதி மட்டத்தில் 36 கூட்டங்களை நடத்தவுள்ளது.

எமது கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளை விடவும் இப்போது எம் முன்னுள்ள முக்கிய பணி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வருவோரை எமது கட்சிக்குள் உள்வாங்குவதாகும்.

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் ஏப்ரல் 2 ஆம் திகதி எமது கட்சியில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply