பிரதமர் மோடியின் உயிருக்கு உலைவைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டம்
பிரதமர் மோடியின் உயிரை குறிவைத்து தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தீட்டிவரும் ரகசிய திட்டம் அம்பலமாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அல்லது மும்பையில் முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தலைநகர் டெல்லியில் தற்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவி உள்ளனர். பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும், கூட்டத்தில் கையெறி குண்டை வீசவும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இத்திட்டமானது வெற்றியடையாவிட்டால், டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அல்லது அதிகாரிகளை குறிவைக்க தீவிரவாதிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சதிதிட்டத்துடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தளபதி அபு துஜானா என்பவனின் துணையுடன் 4 தீவிரவாதிகள் கடந்த மாதமே இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டனர்.
இந்த சதிதிட்டத்தில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.க்கும், அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் இந்திய பிரிவிற்கும் பங்கு உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. பங்கு உள்ளது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இந்தியாவிற்குள் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை பிடிக்க மத்திய உளவுப்பிரிவு மற்றும் டெல்லி போலீசார் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply