மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட 500 இராணுவத்தினர் வாபஸ்
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருணாகல் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டிருந்த 500 இராணுவ வீரர்களை நீக்கிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவரின் பாதுகாப்புக்காக தற்போழுது 130 பொலிஸ் வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினர் வேண்டுமாயின் தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் வரையறை அறிக்கை காணப்படல் வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply