மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை காட்டுமாறு முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்

MUSHILMமரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் தொடர்பில் கருணை காட்டுமாறு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும், இலங்கை மக்கள் சார்பில் குறித்த பெண் தொடர்பில் கருணை காட்டுமாறும் சவுதி அரேபிய மன்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில் கோரியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு சவுதி அரேபியாவின் சட்டம் மற்றும் கலாசார நடைமுறைகள் தெரியாது என தாம் கருதுவதாகவும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி அரேபிய நீதித்துறையின் தீர்ப்புக்கும் சவுதி அரேபியாவின் சட்டத்திற்கும் மதிப்பளிக்கும் அதேநேரம் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகள் இருவரும் மிகவும் மனிதாபிமான அடிப்படையில் மன்னரின் மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் எனவும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply