சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை: 32 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவிப்பு
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பி-1 மற்றும் எப்-15ஜி ரக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட பலநாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க வான் படைகள் 32 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளதாக அங்குள்ள கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ரக்கா மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ரக்கா அருகில் அமெரிக்க வான் படைகள் நேற்று நடத்திய 15-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களினால் உண்டான பயங்கர வெடி விபத்துகளின் காரணமாக குறைந்தது 32 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவில் முகாமிட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply