அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் மர்மகும்பல் தாக்குதல்

schikஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சின் புறநகரில் சீக்கியர் கோவில் குருத்வாரா உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கு ஒரு மர்ம கும்பல் வாகனங்களில் வந்தனர். பின்னர் அங்கு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். முன்னதாக குருத்வாராவின் சுவர்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்த எதிர்ப்பு வாசகங்களை எழுதியுள்ளனர். சமீபத்தில் சான் பெர்னார்டினோவில் கணவன்–மனைவி 14 பேரை சுட்டுக் கொன்றனர். அதன் விளைவாகதான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என சீக்கியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் வெள்ளை மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply