சிரிய மக்கள் போராட்டம் வெடித்த ஹோம்ஸ் நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்

suriyaசிரிய அரசுடன் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஹோம்ஸ் நகரில் கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியில் இருந்தும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தத்திற்கு அமைய முழு நகரும் அரசிடம் கையளிக்கப்படவுள்ளது. நாகரில் இருந்து வெளியேறும் கிளர்ச்சியாளர்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணத்திற்கு செல்கின்றனர்.சிரியாவின் மத்திய நகரான ஹேம்ஸ் சிரிய மக்கள் எழுச்சி போராட்டத்தின் மையமாக இருந்த பகுதியாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக ஆரம்ப கட்ட ஆர்ப்பாட்டங்கள் இங்கேயே இடம்பெற்றன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை ஏற்றிய முதலாவது பஸ் வண்டி நேற்று ஹோம்ஸ் நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நகரில் இருந்து இன்று வியாழக்கிழமைக்குள் கிளர்ச்சி போராளிகள் மற்றும் சிவிலியன்கள் என சுமார் 80 பேர் வெளியேறவுள்ளனர்.

ஐ.நா. மத்தியஸ்தத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த யுத்த நிறுத்தத்திற்கு அமைய ஹோம்ஸ் நகர குடியிருப்பாளர்களுக்கு சுமார் ஓர் ஆண்டுக்கு பின்னர் உணவு உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு முதல் முறை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்த ஹோம்ஸ் நகர் சிரியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகராகும். அதன்போது ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் விசுவாச படையினர் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கையில் பல டஜன் பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து நகரை மீட்க அரச படை கடந்த 2012 ஆம் ஆண்டு பாரிய யுத்த நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபோது, அந்த நகர் மீது மோசமாக குண்டுகள் போடப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply