டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழும் பல நாடுகளை சேர்ந்த குடியேறி மக்களால் அன்போடு ‘அம்மா மெர்கல்” என்று அழைக்கப்படும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஏஞ்சலா மெர்கலை தேர்வு செய்துள்ளது. இது குறித்து டைம் இதழின் ஆசிரியர் நான்சி கிப்ஸ் கூறுகையில், கொடுங்கோன்மைக்கு எதிராக வலிமையுடனும், உறுதியுடனும் செயல்படும் உலக தலைவர்கள் அரிதாகிவரும் நிலையில், ஏஞ்சலா மெர்கல் அப்படிப்பட்ட தலைவராக செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரீஸ் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதிலும், சிரிய அகதிகளை தன் நாட்டுக்குள் அனுமதித்த விஷயத்திலும் ஒரு அரசியல் தலைவர் தன் நாட்டு மக்களிடம் கேட்க அஞ்சும் அளவை விட அதிகமாக கேட்டு பெற்றுள்ளார் ஏஞ்சலா மெர்கல் என புகழாரம் சூட்டியுள்ளது டைம் இதழ்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply