இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் :ஞானசார தேரர்

therarவரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு முறையிருக்கிறது. அதனை மாற்றிச் சவூதிஅரேபியாவில் உள்ள ஒரு கிராமமாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தற்போது அரச அதிகாரிகள் தமிழ் மொழியைக் கற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முட்டாள் சிங்களவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்களில் அரபு மொழியைக் கற்கவேண்டிய சூழலும் ஏற்படலாம். நாட்டின் கலாசாரம் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.

தற்போது அரசியல் தீர்வு பற்றிக் கதைக்கின்றனர். வடக்கு- கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினை ஏன் தோன்றின. இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கு, வர்த்தக நடவடிக்கைகளுக்காக, தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவே ஏனைய இனங்கள் இந்த நாட்டிற்கு வந்தனர். வடக்கு கிழக்கில் இருப்பது அரசியல் பிரச்சினை அல்ல. நிர்வாகப் பிரச்சினை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply