அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள்:அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ

viyadasaஅடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்த யாப்புக்கு நாட்டு மக்களின் கருத்துக்களும் கேட்டறியப்படும் என்றும் கூறினார். அரசாங்கம் மக்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு சகலரும் ஒத்துழைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘அதிகரண’ (நீதி) லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமினவின் இணைப்பு பத்திரிகையாக வெளியிடப்படுகின்றது. இப்பத்திரிகையின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காவன் ரத்நாயக்கா தலைமையில் லேக்ஹவுஸ் மண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply