அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன்-3 ஏவுகணையை பரிசோதித்தது பாகிஸ்தான்
2,750 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தி உள்ளது.பாகிஸ்தான் ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை அணுகுண்டு மற்றும் வழக்கமான வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு 2,750 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. ஏவுகணை சோதனை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் ஒரு மைல் கல்லாக விளங்குகின்ற ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகள், என்ஜினீயர்களை பாதுகாப்பு திட்டங்கள் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் மஜார் ஜமீல் பாராட்டினார்.
மேலும், பிராந்தியத்தில் அமைதியாக ஒருங்கிணைந்து வாழ்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அந்த வகையில் தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை பலப்படுத்த இது உதவும். எந்தவொரு தாக்குதல்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு படைகளின் ஆயத்த நிலை, பாதுகாப்பு படைகளின் தளகர்த்தர்கள், கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின்மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதுபோன்று இத்திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ராணுவ ஆயுத திட்டப்பிரிவினர் என அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி மம்னூன் உசேன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
ஷாஹீன் ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்துவரும் பாகிஸ்தான் ஷாஹீன்-1, ஷாஹீன்-2 சோதனைகளை கடந்த ஆண்டு நடத்தியது. தற்போது ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply