சர்வாதிகாரி கடாபியின் மகன் கடத்தல்: லெபனானில் பரபரப்பு

kadafi sonலிபியா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான முகமது கடாபியின் மகன் ஹன்னிபல் கடாபி, லெபனானில் ஆயுதம் தாங்கிய மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.அண்மையில், லெபனான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான வீடியோவில், ஹன்னிபல் கடாபி, 1978-ம் ஆண்டு மாயமான மதகுரு மௌசா அல்-சதார் பற்றிய தகவல்களை வைத்திருப்பவர்கள் முன்வந்து உதவுமாறு பொதுமக்களை கேட்டிருந்தார்.இந்த நிலையில், லெபனானில் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு பின் அவர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர், பால்பெக் நகரத்தில் விடுவிக்கப்பட்டு பெய்ரூட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தக் கடத்தல் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் லெபனானின் பிரபலமான ஷியா மதகுருவாக அறியப்படுகின்ற அல்-சதார், 1978-ம் ஆண்டு திரிபோலிக்கு சென்றிருக்கையில் வேறு இருவருடன் சேர்த்து காணாமல் போயிருந்தார். இதற்கு முகமது கடாபிதான் காரணம் என்று லெபனான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply