சிரியா ஆஸ்பத்திரியில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 17 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இருந்தும் அங்கு இன்னும் உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இங்கு அவர்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸ்சில் ஆஸ்பத்திரி அருகே நேற்று தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். ஆஸ்பத்திரி அருகே நிறுத்தி வைத்திருந்த காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வெடிக்கச் செய்தனர். அதனால் அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் நொறுங்கி சேதம் அடைந்தன. கட்டிடங்களும் இடிந்தன.
இத்தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி பலியாகினர். 100 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரியா அரசுக்கும் இடையே ஐ.நா. சபை மூலம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹோம்ஸ் நகரில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு ராணுவம் மனிதாபிமான முறையில் உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply