சவுதி தேர்தல் முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு
சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் நேரடித் தேர்தல் மூலம் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட, சல்மா பிண்ட் ஹிஜாப் அல்-ஒடேய்பி எனும் பெண்மணி மெக்கா மாகாணத்திலுள்ள முனிசிபல் கவுன்சில் ஒன்றில் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
முதல் முறையாக சவுதி அரேபியாவில் இத்தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
நடைபெற்ற இந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுமார் 1000 பெண்கள் போட்டியிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply