ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் வேட்டைக்கு அதிகப் படைகளை ஜெர்மனி அனுப்ப வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டைக்கு மேலும் அதிகப் படைகளை ஜெர்மனி அனுப்பிவைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பாரிஸ் தாக்குதலை அடுத்து இந்த தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியும் தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. முதல்கட்ட ஜெர்மன் படைகள் துருக்கி சென்றுள்ளன.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் படை தலைமையகம் ஜெர்மனிக்கு கடிதம் எழுதியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply