இந்தியாவை சேர்ந்த 2 குற்றவாளிகள் நேபாளத்தில் சுட்டுக் கொலை

gun fireநேபாளம் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் இந்தியாவை சேர்ந்த குற்றவாளிகள் இருவரை அடையாளம் தெரியாத குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலம் சிட்டாமடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகேஷ்குமார் மற்றும் கபில்குமார் ரே. இவர்கள் இருவரும் நேபாளத்தின் சர்லகி மாவட்டத்தில் நேற்று மாலை கொலை செய்யப்பட்டனர். முகேஷ்குமார் மற்றும் கபில்குமார் ரே இருவரும் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளதாக நேபாள போலீசார் கூறியுள்ளனர். இருவரது உடலையும் இன்று காலை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து மருத்துவ பரிசோதனை செய்த பின்பு இந்திய அதிகாரிகளிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று நேபாள போலீசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply