பீல்ட் மார்சலுக்கு எதிராக ஊடக யுத்தமொன்றை முன்னெடுக்க “எவன் காட்” நடவடிக்கை
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக பாரிய ஊடக யுத்தமொன்றை முன்னெடுக்க எவன் காட் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு உள்ளதாக தெரிவித்து பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா அண்மையில் நிஸ்ஸங்க மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
இதற்குப்பதிலடியாக சரத் பொன்சேகா இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த எவன் காட் தரப்பு தயாராகி வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான ஊடக சந்திப்பொன்றை எவன் காட் தரப்பு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply