வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவது இல்லை: செல்வம் அடைக்கலநாதன்

selvamதமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரையில் வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் கலந்துகொள்ளப்போவது இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொதுக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கிலேயே, வரவு – செலவுத்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் வழங்கப்போவது இல்லை என்ற நிலைவரும்போது சர்வதேச சமூகத்திடம் நியாயமான கோரிக்கையை முறையிடும் நிலையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அதனை ஆதரித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவினை எடுக்காவிடின் மூன்றாவது வாசிப்பில் நடுநிலை வகிக்கவேண்டும் என வாக்கெடுப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவரிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும், இந்நிலையில், வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் வாக்களிக்கப்போவது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply