ரஷியாவில் மனநல ஆஸ்பத்திரியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு
ரஷியாவில் தெற்கு வெரோனஷ் மாகாணத்தில் ஆல்ப்யோரோவ் என்ற கிராமம் உள்ளது. அங்கு மனநல நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி உள்ளது.அங்கு 73 நோயாளிகள் தங்கியிருந்தனர். 4 நர்சுகள் பணியில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு கடும் புகைமூட்டத்துடன் தீ எரிந்தது.இந்த விபத்தில் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் உடல் கருகி அதே இடத்தில் 21 பேரின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 60 முதல் 70 வயது வரையிலான முதியவர்கள், இவர்கள் தவிர 40 முதல் 50 வயதுள்ளவர்களும் அடங்குவர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply