ஜெர்மனியில் இயங்கி வந்த பேஸ்புக் அலுவலகம் சூறை

fechbookஜெர்மனியில் ‘பேஸ்புக்’ அலுவலகம் மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்கியது.ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் தலைமை அலுவலகம் ‘ஹாம் பார்க்’ நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 15 முதல் 20 பேர் அடங்கிய கும்பல் அங்கு சென்றது.அவர்கள் தங்களது முகத்தை மறைத்தபடி கருப்பு நிற முகமூடி அணிந்திருந்தனர். பின்னர் அந்த அலுவலகம் மீது கற்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பெயிண்டுகளையும் வீசினர்.

அதில் ‘பேஸ்புக்’ தலைமை அலுவலகத்தின் கட்டிட சுவர் சேதம் அடைந்தது. முன்பக்க கதவு மற்றும் ஜன்னல்கள் உடைந்து நெறுங்கின. தகவல் அறிந்ததும் போலீசாரும், உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளும் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மேலும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

‘பேஸ்புக்’கில் வெளியாகும் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply