மாசு வெளிப்பாடு தொடர்பாக வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
வோல்ஸ்வேகன் தயாரிப்பு வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மாசை வெளியிடுவது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் வசிக்கும் சாத்விந்தர் சிங் சோதி மற்றும் சிலர் சேர்ந்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்பு வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவில் மாசை ஏற்படுத்துவதாகவும், எனவே அந்த நிறுவன தயாரிப்புகளின் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வாந்தர் குமார். இது தொடர்பாக டிசம்பர் 23-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி சங்கம் மற்றும் வோல்ஸ்வேகன் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply