வெடிகுண்டு பீதி: பிரேசில் நாட்டு விமானம் பாதிவழியில் மேட்ரிட் திரும்பியது
பிரேசில் நாட்டைச் சேர்ந்த டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தடம் எண்:JJ8065, போயிங் 777-32W ரகத்தை சேர்ந்த விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் மேட்ரிட் நகரில் உள்ள பராஜா விமான நிலையத்தில் இருந்து சாவ் பாலோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது.அதிகாலை 5.25 மணிக்கு சாவ் பாலோ நகரை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளுக்கு மர்ம அழைப்பு வந்தது. அப்போது, சுமார் ஒன்றரை மணிநேர பயண தூரத்தை கடந்துவிட்ட அந்த விமானம் மொராக்கோ நாட்டின் காஸாபிளாங்கா நகரை நெருங்கிக் கொண்டிருந்தது.
இதையடுத்து, உடனடியாக மேட்ரிட் நகருக்கு திரும்பிவரும்படி அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி, அவசரமாக அந்த விமானம் மேட்ரிட் நகரை வந்தடைந்தது. பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கிய பின்னர் மோப்ப நாய்களின் உதவியுடன் அந்த விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply