தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணிக்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் :மாவை சேனாதிராஜா
மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபையில் குற்றஞ்சாட்டினார்.நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக மக்களின் வாக்குகளினால்தான் இந்தச் சபையில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இதனை மறந்துவிடக்கூடாது.
அமைச்சர் சுவாமிநாதனிடம்தான் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சு ஒப்படைக்கப்படவேண்டும் என நாம் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தோம். அத்துடன், அமைச்சர் சுவாமிநாதனுடன் 100இற்கு 200வீதம் ஒத்துழைத்து செயற்படவும் நாம் தயாராக இருந்தோம்.
ஆனால், சுவாமிநாதனோ இன்று எம்மை அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி, தன்னிச்சையாகச் செயற்படுவதுடன், வடக்கு, கிழக்கு விடயங்களில் தனித்துப் பயணிக்கவும் முற்படுகின்றார்.
. இந்நிலையில், தமது சொந்த இடத்தில் வாழும் உரிமை வேண்டும் என்பதற்காகவே ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கான உறுதிமொழிகளை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கியிருந்தனர். ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் எமக்குக் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லையேல், மஹிந்த அரசுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டங்களைப்போல மீண்டும் காணி மீட்புப் போராட்டத்தில் இறங்குவோம். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி, எமது தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தச் சபையில் வலியுறுத்துகின்றேன் என மேலும் தெரிவித்தார.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply