பயங்கரவாதத்திற்கு எதிராக போராட சர்வதேச இஸ்லாமிய கூட்டணி உருவாக்கம்
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட சர்வதேச இஸ்லாமிய கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.சவுதி அரேபியா தலைமையில் 34 நாடுகள் பங்குகொள்ளும் இந்த கூட்டணி ரியாத் நகரை தனது தலைமையகமாக கொண்டு இயங்கும் என செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறித்த நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டணியில் சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாக்கிஸ்தான், கத்தார், பஹ்ரைன், வங்காளம், பெனின், சாட், டோகோ, துனிசியா, ஜிபூட்டி, செனகல், சூடான், சியரா லியோன், சோமாலியா, காபோன், கினியா, பாலஸ்தீனம், கோமரோஸ், ஐவரி கோஸ்ட், குவைத், லெபனான், லிபியா, மாலைதீவு, மலேஷியா, மாலி, மொரோக்கோ, மூரித்தானியா, நைஜர், நைஜீரியா மற்றும் யெமன் ஆகிய நாடுகள் பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய உள்ளிட்ட மேலும் 10 இஸ்லாமிய நாடுகள் இந்த கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக கூட்டணி நாடுகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply