கூட்டு ஒப்பந்தம் பத்து தினங்களில் கைச்சாத்திடப்படாவிடில் தீக்குளிப்பேன் : வடிவேல் சுரேஷ்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் கைச்சாத்திடப்படாவிட்டால், அவர்களது சம்பளத் தொகை என்னவென்று கூறாவிட்டால் தோட் டத் தொழிலாளர்களை அழைத்து வந்து இந்த சபையிலேயே தீக்குளிப்பேன். மலையக மக்களுக்காக எனது உயிரையும் தியாகம் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று சபையில் தெரிவித்தார்.பராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவாகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரனை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷ் எம்.பி. மேலும் கூறுகையில்,
இன்றைய தினத்திலே மலையக வரலாற்றில் ஒரு சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தப் பிரேரணையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. பெருந்ததோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள உயர்வை இழுத்தடிப்பதற்கு காரணமானவர்கள் யார்? என்ன காரணத்தினால் மலையக மக்களை பழிவாங்குகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த ஒன்பது மாத காலமாக அந்த மக்கள் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எமது நாட்டிலேயே பாராளுமன்றத்திற்கு மேலாக எந்த வோர் சபையும் கிடையாது பாராளுமன்றமே இறுதியானதும் உறுதியானதும் முடிவினை எடுக்கக் கூடிய இடமாகும். இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் ரவி சமரவீர ஆகியோர் எமது மக்களுடன் இரண்டரக் கலந்தவராவர். அவர்கள் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்துள்னர்.
எனினும் தொழிற்சங்கம் என்ற பெயரில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுபவர்கள் தொழிற்சங்கவாதிகள் மேலும் காலத்தை தாழ்த்தாது எமது உடன் பிறப்புக்களை பழிவாங்காது நாட்க்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டத்திலேயே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால்இ அவர்களது சம்பளத் தொகை என்னவென்று கூறாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களை அழைத்து வந்து இந்த சபையிலேயே தீக் குளிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மலைய மக்களுக்காக எனது உயிரையும் தியாகம் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்.
அமைச்சர்களான திகாம்பரம் மனோகணேசன் இராதகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சம்பள உயர்வுக்கான முன்னெடுக்கின்ற அதேநேரம் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க எமது மக்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்பட்டு வருகிறார். அவருக்கும் எமது மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்மவர்களே எமது மக்களை பழிவாங்கினர் ஆனால் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இராஜாங்க அமைச்சர் ரவிசமரவீர ஆகியோர் மீது எமக்கு நம்பிக்கையுள்ளது. அதேபோன்று எமது தலைவர் பிரதமர் ரணில்விக்கிரம சிங்கமீதும் நம்பிக்கையிருக்கிறது. ஆகையால் அதிவிரைவாக அதாவது எமது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி நிறைவடைவதற்கு முன்பதாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத் தொகையை இந்த சபை நிர்ணயிக்க வேண்டும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply