யாழ் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது
வடக்கின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரம் இன்று இரவு 12.30க்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியார் வீதி உதயன் வீதி காங்கேசன்துறை வீதியை இணைக்கும் உதயன் அலுவலகத்திற்குச் செல்லும் சிறு குச்சொழுங்கையின் ஊடாகச் சென்ற ஆயுததாரிகளே கைக்குண்டினை வீசியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இதில் காவலுக்கு நின்ற காவற்துறைச் சிப்பாய் காயமடைந்துள்ளார். இக் கைக்குண்டு உதயன் ஆசிரியர் பீடத்திற்கு கீளே உள்ள கட்டிடத்திலேயே வீழ்ந்து வெடித்துள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியின் ஊடாகவே கைக்குண்டு வீசப்பட்டது.
முற்றுமுழுதாக காவற்துறையின் பாதுகாப்பிற்கு உட்பட்டே உதயன் பத்திரிகை அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த 2006ல் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுததாரிகள் புகுந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் இரு பணியாளர்கள் கொல்லப்பட்டு இருவர் காயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply