ஜனாதிபதி இன்று பேச்சுவார்த்தை
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு நீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். இன்று (16) நாடுதிரும்பும் ஜனாதிபதி உடனடியாகவே தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான
முரண்பாடுகள் மற்றும் சமூக ரீதியில் எழுந்துள்ள வாதங்கள் தொடர்பில் ஜனாதிபதி தமது கவனத்தைச் செலுத்தியுள்ளார். நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற வகையிலும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது முக்கியமாகிறது.
இத்தகைய முரண்பாடுகள் தொடர்பில் செவிமடுப்பதற்கும் அவை தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானங்களை எட்டுவதற்கும் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பிரச்சினைகள் உருவாகியுள்ள துறைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். அதேவேளை தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply