மன்னரின் நாயை கிண்டல் செய்ததற்கு 37 வருடம் சிறை தண்டனையா?: தாய்லாந்தில் விபரீதம்

thailandதாய்லாந்தில் ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி நடைபெற்று வருகின்றது. மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்நிலையில் மன்னரின் நாயை கிண்டல் செய்ததற்காக தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு தாய்லாந்து அரசு சிறை தண்டனை அளித்துள்ளது.

தானாகொர்ன் சிரிபைபூன் என்ற அந்த தொழிலாளி இணையத்தில் மன்னரின் நாய் குறித்து கிண்டலாக பதிவு ஒன்றினை தெரிவித்தார். அதற்காக தொழிலாளி சிரிபைபூன் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் மன்னரை அவமதித்த குற்றச்சாட்டு என்று இரண்டு பிரிவுகளில் ராணுவ நீதிமதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருடையை இந்த இணைய தள பதிவிற்காக 37 வருட சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.

மன்னருடைய நாய் குறித்து உண்மையில் அந்த தொழிலாளி என்ன சொன்னார் என்பது குறித்து ராணுவம் எந்த தகவலையும் வெளியிட மறுக்கிறது என்று தொழிலாளியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், “மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்படும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது.” என்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக சிந்தையாளர் ஒருவர் கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply