ஏலத்தில் எடுத்த தாவூத் இப்ராகிம் காரை திட்டமிட்டபடி கொளுத்துவேன்: இந்து மகாசபா தலைவர்

hindu 557-4094-a03a-730758f9fb78_S_secvpfமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனது சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டது.அதன்படி கார்கள், கட்டிடம் உள்பட 7 சொத்துக்கள் கடந்த 9–ந்தேதி ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்று தாவூத்தின் காரை ஏலம் எடுப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இந்து மகா சபா தலைவர் சக்ரபாணி டெல்லியில் இருந்து மும்பை வந்தார்.தாவூத் இப்ராகிம் பயன்படுத்திய கார் 2000–ம் ஆண்டு மாடல். ரூ.4.28 கோடி மதிப்புள்ள பச்சை நிற ஹூண்டாய் சொகுசு கார் முதலில் ஏலம் விடப்பட்டது.அதை மும்பையைச் சேர்ந்த பழைய பொருள் வியாபாரி ஒருவர் ரு.30,000–க்கு கேட்டார். தொடர்ந்து சக்கரபாணி ரூ.32,000–க்கு ஏலம் கேட்டார்.

மேற்கொண்டு யாரும் கேட்காததால் இறுதியில் கார் அவருக்கு வழங்கப்பட்டது.இந்த காரை நொறுக்கி எடைக்கு போடுவேன் அல்லது பொது இடத்தில் தீ வைத்து கொளுத்துவேன் என்று சக்கரபாணி அறிவித்துள்ளார்.சக்கரபாணி சார்பில் இந்து மகாசபா பொதுச்செயலாளர் இந்திரா திவாரி பணத்தை கட்டினார். இந்த கார் தாவூத் பெயரில் இல்லை. அதன் உரிமையாளர் தானேயைச் சேர்ந்த ரந்திர்சிங் என தெரியவந்தது. இதையடுத்து தானே ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் அந்தக் காரின் நம்பர் பிளேட்டை கேன்சல் செய்து விட்டு காரை அழிப்பேன் என்று சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இதற்கிடையே தாவூத் காரை எரிக்கப்போவதாக அறிவித்த சக்கரபாணிக்கு கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ். வருகிறது. இதுபற்றி அவர் டெல்லி மந்திர் மார்க் போலீசில் புகார் செய்துள்ளார்.இந்த மிரட்டலுக்கு பயப்படமாட்டேன், எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை, திட்டமிட்டபடி காரை எரிப்பேன் என்று சக்கரபாணி தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply