தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97-வது இடம்: போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு
தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளை அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பட்டியலிட்டு வருகிறது. அதன்படி 2015ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில், அதாவது 97-வது இடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, ஜப்பான் நாடுகள் தலா 3 இடங்கள் அதிகரித்து தற்போது முறையே 10 மற்றும் 23வது இடத்தில் உள்ளன. ஜெர்மனி 2 இடங்கள் முன்னேறி 18வது இடத்திலும், சீனா 97-ல் இருந்து 94-வது இடத்திலும் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா(47, மெக்சிகோ (53), கஜகஜ்தான்(57), ஜாம்பியா (73), கானா (79),ரஷ்யா (81), இலங்கை (91) ஆகிய நாடுகளும் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. பாகிஸ்தான் 103-வது இடத்திலும், வங்காளதேசம் 121-வது இடத்திலும் உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply