கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் :முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்

vikiதமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இருந்தாலும் கவனிக்கப்படாத, கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் உலக சிறுவர் தினம் இன்று யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் ஆண்டுதோறும் சிறுவர் வன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது 2014ஆண்டு முதல் இன்று வரை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட சிறுவர் வன்முறைகள் தொர்பான புள்ளிவிபரம்
சிறுவர் துஸ்பிரயோகம்- 469
சிறுவர் தற்கொலைகள்- 45
தொழிலாளர்களாக சிறுவர் பாவிப்பு- 54
கைவிடப்பட்ட சிறுவர் – 784
புறக்கணிக்கப்பட்ட சிறுவர்- 153
கடத்தப்பட்ட சிறுவர்- 8
அச்சுறுத்தலுக்குள்ளான சிறுவர்- 44
தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர் – 76
சிறுவர் திருமணம்- 86

சிறுவர் வதைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற பெற்றோர்ளின்; கரிசனையே இன்றியமையாதது. பெற்றோர்களின் பற்றும், பாசமும் அவர்களை நல்வழிப்படுத்தும். ஆனால் சில பெற்றோர்கள் பிள்ளையை சிறுவயதிலிருந்து பாடசாலை செல்வதை விலத்தச் செய்து அவர்களை கடலை, கற்பூரம், பேப்பர் போன்ற விற்பனை தொழில் முயற்சிகளில் பசிக்கொடுமையின் நிமித்தம் ஈடுபட வைக்கிறார்கள். ஆகவே குழந்தை பெறுகிறோம் சமூக சீரழிவுக்கு வித்திடுகிறோம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல போரினால் 1150க்கு மேற்பட்ட சிறுவர்கள் நலன்புரி முகாம்களிலும், குடிசைகளிலும் வாழ்கின்றனர்.இதனால் அவர்களது கல்வி பின்னடைவுக்கு உள்ளாக்கப்படுகின்றது. பிள்ளைகள் சூதுமாது அறியாதவர்கள். ஆனால் இன்று புலனுணர்வை கிளர்ச்சியூட்டும் ஆபாச வீடியோக்களினால் சிறுவர்கள் கல்வியில் பின்னடைவை எதிர்நோக்குகின்றனர்.

எனவே சிறுவர் தினமாகிய இன்று முதலில் பெற்றோர்களுக்கே அறைகூவல் விடுக்க வேண்டியுள்ளது. அதாவது, பிள்ளைகளை பற்றும், பாசமும், கரிசனையுடன் வளர்த்தெடுத்து அவர்களை எதிர்கால சிற்பிகளாக மிளிர வைக்கவேண்டுமே தவிர சமூக சீரழிவுக்குள் தள்ளக்கூடாது. ஆகவே எதிர்காலத்தில் பிள்ளைகளை நற்பிரஜையாக உருவாக்க பெற்றோர்களே கரிசனையுடன் நடந்து கொள்ளுங்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply