தொழிலாளர்களின் சம்பள பிரச்சிணைக்கு நாளை தீர்வு கிடைக்காவிடின் தீக்குளிப்பேன் வடிவேல் சுரேஸ் எச்சரிக்கை.!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் எந்தவித தீர்மானமும் அறிவிக்கப்படாத பட்சத்தில் தாம் தீக்குளிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடிவேல் சுரேஸ், வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டியது அவசிம் என தெரிவித்துள்ளார்.
அனைத்து துறை சார்ந்த பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்வாங்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply