ஈராக் – சிரியாவில் அமெரிக்க விமானங்களை பறவை குண்டு மூலம் தாக்க தீவிரவாதிகள் சதி

isisசிரியா மற்றும ஈராக்கின் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகளும், ரஷிய விமானங்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன.அதை சமாளிக்க ஐ.எஸ்.தீவிரவாதிகள் புதுவிதமான தந்திரத்தை கையாள திட்டமிட்டுள்ளனர். அதாவது பறவைகளை தற்கொலை படையாக பயன்படுத்தி குண்டு வீசும் விமானங்களை தகர்க்க சதி திட்டம் தீட்டியுள்ளனர்.இதற்காக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள பருந்துகள் மற்றும் புறாக்களை எடுத்து சென்றுள்ளனர். பறவைகள் உடலில் குண்டுகளை கட்டி பறக்க விட்டு அவற்றை விமானங்களில் மோதச் செய்து வெடிக்க வைக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது கோழிகள் உடலில் வெடிகுண்டை கட்டி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வெடிக்க செய்கின்றனர். அதே போன்ற முறையை விமானங்களை தகர்க்க பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளனர்.

ஒரு ஐ.எஸ்.தீவிரவாதி இது குறித்து சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வெடிகுண்டு கட்டப்பட்ட காகம் ‘ரிமோட்கண்ட்ரோல்’ மூலம் வெடிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படை மற்றும் ரஷிய விமான படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply