கழிப்பறையில் மர்மப் பொருள்: 473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம்
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AF 463 தடம் எண் கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் மொரிஷீயஸ் தீவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி புறப்பட்டுச் சென்றது.459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் நடுவானில் கென்யா நாட்டின்மீது பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தின் கழிப்பறைக்குள் கிடந்த ஒர் மர்மப்பொருளை கண்ட விமான பணியாளர்கள் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இவ்விவகாரம் விமானிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அருகாமையில் உள்ள மோம்பாஸா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அனுமதி கேட்டார்.
இதையடுத்து, அவசரமாக அனுமதி அளிக்கப்பட்டது. மோம்பாஸா நகரில் உள்ள மோய் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply