கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் லிபியாவில் 11 பேர் சாவு

libiyaலிபியாவின் அஜ்தாபியா நகரவாசிகளுக்கும், அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் 11 பேர் உயிரிழந்தனர்.லிபியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த அஜ்தாபியா நகரம், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த நகரில், அல்-காய்தாவுக்கான லிபியப் பிரிவான அன்ஸார் அல்-ஷரியாவுக்கும், ஆயுதம் தாங்கிய நகரவாசிகளுக்கும் இடையே கடந்த புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் நகரவாசிகள் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என லிபியாவில் செயல்படும் செம்பிறைச் சங்க அதிகாரி மன்சூர் அட்டி கூறினார்.

சண்டையில் அன்ஸார் அல்-ஷரியா பயங்கரவாதிகள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

எண்ணெய் வளம் மிக்க அஜ்தாபியா நகரம், பெங்காஸி நகருக்கு 162 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த நகரைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நகருக்கு 360 கி.மீ. தொலைவிலுள்ள, முன்னாள் அதிபர் கடாஃபியின் சொந்த ஊரான சிர்டேவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அன்ஸார் அல்-ஷரியா பயங்கரவாதிகள், எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் அஜ்தாபியா நகர் மீது தாக்குதல் நிகழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply