ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி மெஜாரிட்டி இழந்தது – கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி
ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி மெஜாரிட்டி இழந்ததால் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி நடக்கிறது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் மரியானோ ரஜாயின் பாப்புலர் கட்சி மற்றும் பொடிமோஸ், லிபரல் சியுடாடனோஸ், சோசலிஸ்ட் ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஒட்டு எண்ணிக்கை நடந்தது. அதில் ஆளும் பாப்புலர் கட்சி 28.7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் சோசலிஸ்ட் கட்சி 22 சதவீதமும், சியுடாடனோஸ் 13.9 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர்.
ஆளும் பாப்புலர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தற்போது பாராளுமன்றத்தில் தனி மெஜாரிட்டியை இழந்து விட்டது. அதற்கு அடுத்தப்படியாக சோசலிஸ்ட் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது.
இந்த இரு கட்சிகளும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளன. தற்போது பொடிமோஸ் கட்சி மக்களிடையே செல்வாக்கு பெற்றதால் இக்கட்சிகளுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
எனவே பாப்புலர் கட்சியும், சோசலிஸ்டு கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் பிரதமர் மரியானோ ரஜோயும், சோசலிஸ்டு கட்சி தலைவர் பெட்ரோ சான்செசும் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply