சீனா தொழிற்பூங்காவில் நிலச்சரிவு: 33 கட்டிடங்கள் புதைந்தன: 93 பேர் மாயம்
தெற்கு சீனாவில் ஹாங்காங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகரில் உள்ள தொழிற் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 93 பேர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்த தொழிற் பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடங்கள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மண் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், நேற்றைய நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுடன் கலந்திருந்த அந்த மண்மேடு சரிந்து அருகில் உள்ள 33 கட்டிடங்களை மூடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 60 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் உள்ள கட்டிடங்கள் இந்த நிலச்சரிவால் புதைந்துப் போய் கிடக்கின்றன.
இடிபாடுகளில் இருந்து சுமார் ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 59 ஆண்கள் 32 பெண்கள் என மொத்தம் 91 பேரை காணவில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்ஸுவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலச்சரிவால் மலைப்பகுதியில் இருந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் பலியானது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply