அரசாங்கத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது : நிமல் சிறிபால டி சில்வா
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கத்தைக் கலைக்க ஜனாதிபதியால் முடியாது. அதேபோன்று, தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை, எதிர்வரும் நான்கரை வருடங்களுக்கு அசைக்கவே முடியாது என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். வெலிமடைப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நிமல், ‘தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம், இன்னும் ஓரிரு வாரங்களில் கலைந்துவிடும் என சிலர், நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், அது அவர்களது கனவு மாத்திரமே. இந்த அரசாங்கத்தை இன்னும் நான்கரை வருடங்களுக்கு அசைக்க முடியாது. இந்த அரசாங்கத்தைக் கலைக்க, ஜனாதிபதியால் கூட முடியாது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தைக் கலைப்பதாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்’ என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply